Home > Tamil

The Great Thought: Tamil


TAMIL MESSAGE: Find Here Tamil Messages, Superb Collection of WhatsApp Tamil SMS, Funny Tamil SMS Messages. You will get here Funniest Messages, Messages in Tamil sources with Pictures/images Messages, Not only this but also you can get Best WhatsApp Funny Tamil Messages, Funny Tamil Pictures, Funny Tamil SMS, Husband Wife & Kids Messages & Santa Banta Messages and moreover. You can also get here Todays New Tamil Message. kiosklockdown.in is Family Friendly website. Hope this will be liked by you and share with other. If our effort to laugh has been successful, you can like/share this page and encourage us. "Laughing is the best medicine in this world." Always laugh… Be Healthy… Be Happy… Thanks...

மிருகத்திடம் அன்பாக பழகுங்கள்.. அதற்கும் மனித குணம் வந்து விடும்.. மனிதனிடம் எச்சரிக்கையுடன் இருங்கள்.. அவன் எப்போது வேண்டுமானாலும் மிருகமாகலாம்..!!

காகிதம் - கசக்கும் போது குப்பையாய் பார்க்கிறோம். காசாக்கும் போது கடவுளாய் பார்க்கிறோம். நாமும் காகிதம் தான் குப்பையாவதும் கடவுலாவதும் நம் தரத்தை பொறுத்துதான்!..

காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே! - மனதை வருடிய வரிகள்

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது.அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.

புருஷன்கிட்ட நல்லபேர் வாங்க பொண்டாட்டி சீரியல் பார்க்காம இருந்தா போதும்.. பொண்டாட்டிகிட்ட நல்லபேர் வாங்க புருஷன் மொபைல நோண்டாம இருந்தா போதும்...

நான் யாரையும் நம்பி இல்லை என்று சொல்பவர்கள் திமிர் பிடித்தவர்கள் அல்ல.. ஒருவேளை எல்லோராலும் ஏமாற்றப்பட்டும் புறக்கணிக்கபட்டும் இருக்கலாம்..!!

பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்

நல்லவனாய் இரு.. அனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே.. அதை விட முட்டாள்தனமான விஷயம் ஏதுமில்லை..

பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை..!!

உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.

எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இந்நன்னாளில் வாழ்த்துகிறேன்!

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும். வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால்.... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும். எது அந்த தவளையை கொன்றது...? பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது". நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். ஆனால், நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள். உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. "நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"..!!!

அந்த காலத்தில் சாப்பிட்டவுடன் வெத்தலை போடுவாங்க.. இந்த காலத்தில் சாப்பிட்டவுடன் மாத்திரை போடுறாங்க..!

: மனைவி : "அன்பே.. இன்று நமது கல்யாண நாள். எப்படி கொண்டாடுவது?" கணவன் : "2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்.."

எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

மக்களின் தலையில் கொட்டிக்கொண்டிருப்பதன் மூலமாக அவர்களை உங்களால் வழி நடத்த முடியாது. அதற்குப்பெயர் தாக்குதலே தவிர தலைமைப்பண்பல்ல. - ட்வைட் டி ஐசனோவர்

தேவையற்ற பேச்சே உறவுகளை தொலைப்பதற்கு காரணம். பேச்சை அடக்கினால் உறவு நிலைக்கும்.

நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். "என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார். புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்... "ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான். இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. *உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும்*" என்றார் குரு. படித்தேன்,ரசித்தேன் பகிர்ந்தேன் .......!!!

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

தினம் திட்டும் அப்பாவின் வார்த்தைகளைவிட திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம் கொடியது..

அதிகாலையில் கஷ்டப்பட்டு எந்திரிச்சு கூவுறது சேவல். பேரு வாங்குறது கோழி.. "கோழி கூவுது" !! - ஆண் பாவம்

உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே... அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது...!

இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாத போதுதான் தெரியும் அன்பின் அருமையும் தனிமையின் கொடுமையும்..

மகன்:- அப்பா அரசியல்னா என்ன? அப்பா:- உதாரணத்துக்கு நம்ம குடும்பத்தை எடுத்துக்கோ. என்கிட்டே நிறையா காசு இருக்கு, அதனால நான் தான் மேல் தட்டு வர்க்கம்.. அம்மா என்கிட்டே அப்போ அப்போ பணம் வாங்கி செலவு செய்யறாங்க இல்ல.. அவங்க தான் அரசாங்கம்.. நம்ம வீட்டுல வேலை செய்யறாலே வேலைக்காரி அவ தான் உழைக்கும் வர்க்கம்.. நீ தான் மக்கள், உன் தம்பி பாப்பா தான் எதிர்காலம். இப்போ புரியுதா? மகன்:- சுத்தமா புரியலை.. அப்பா:- நல்லா யோசிச்சி பாரு புரியும் அன்று இரவு தூங்கிட்டு இருந்த மகன் தம்பி பாப்பா அழுகிற சத்தம் கேட்டு கண் விழிச்சான். தம்பி பாப்பா ஜட்டியில ஆய் போய் நாஸ்த்தியா இருந்துச்சி. போய் தூங்கிட்டு இருந்த அம்மாவை எழுப்பினான். அம்மா எழவே இல்லை.. அம்மா பக்கத்துல அப்பாவை காணோம். சரி வேலைக்காரிய கூப்பிடலாம்னு அவ ரூமுக்கு போனா அங்க அவன் அப்பா வேலைக்காரி-ய சுரண்டிகிட்டு இருந்தார். ரூமுக்கு வெளிய நின்னு கத்தி பார்த்தான், ஆனா கடைசி வரைக்கும் யாருமே வந்து அவனுக்கு உதவி செய்யலை.. மறுநாள் காலை.. அப்பா:- என்னடா அரசியல்னா என்னான்னு புரிஞ்சுதா.. மகன்:- ரொம்ப தெளிவா புரிஞ்சதுப்பா.. அப்பா:- அப்படியா வெரி குட்.. இப்போ தெளிவா சொல்லு பாக்கலாம்.. மகன்:- மேல் தட்டு வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தை தான் சுரண்டி எடுக்கும்.. அதை அரசாங்கம் கண்டுக்காம தூங்கிட்டு இருக்கும்.. மக்களுக்கு உதவி செய்ய யாரும் வரமாட்டாங்க.. எதிர்காலம் நாறி போய்டும்...!!

சிரிப்பின் மொழி மறந்தவன் வாழ்வையே தொலைத்தவன். - ஓஷோ

அறிவுரையால் ஆளானவர்களை விட, அலட்சியத்தால் அழிந்தவர்கள் அதிகம்!

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சினைகள் வரும்போது அல்ல; பிரச்சினைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது. - சுப்பிரமணிய பாரதி

குட்டி கதை... ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.. ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்.. வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!???

3 மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர். படம் முடிந்ததும் ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர்... அவரிடம் "சார் காலையில ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்... வர்ற வழில பைக் பஞ்சராகி மூனுபேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்... எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்" என்றனர். ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார். மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டுவந்தாய்ங்க. மூனு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார். கேள்வி தாள்ல நாலே கேள்வி 4 தான் இருந்திச்சு. 1.யாருக்கு கல்யாணம்?(25 மார்க்) 2.கல்யாணம் எங்க நடந்துச்சு?(25 மார்க்) 3.மாப்ள என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்?(25 மார்க்) 4.எந்த பைக்ல போனீங்க?(25 மார்க்) கண்டிசன்:பதில்லெல்லாம் ஓரே மாதிரி இருக்கனும்.!! செத்தான்டா சேகரு...!!!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.. எந்த மனிதன் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறானோ, அந்த மனிதன் நன்றாகவே இருப்பான்.. இதை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்..!!

ஓலிக்கையை நீட்டி வாழ்க்கை காட்டிய வசந்த நாள் நீ பிறந்த நாள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

யாரோ ஒருவரின் நிராகரிப்புக்காக வருந்தாதீகள்.. யாரோ ஒருவரால் நிராகரிக்கப் பட்டது, ஒருவரால் நேசிக்கப்படுகின்றது...

இந்தியாவில் நாம் மரணம், நோய், பயங்கரவாதம் மற்றும் குற்றம் பற்றி மட்டுமே படிக்கின்றோம். - அப்துல்கலாம்

"அவன் எனக்கு நல்ல நண்பன்" என்பதைவிட.. "அவனுக்கு நான் நல்ல நண்பன்" என்பது தான் நட்பின் சிறப்பு.

அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும். இனிய மாலை வணக்கம்!

முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!

எங்கு துயரம் புதியதாக இருக்கின்றதோ, அங்கு அதை திசை திருப்பும் எந்த முயற்சியும் எரிச்சலடைவதில் மட்டுமே முடியும். - சாமுவேல் ஜான்சன்

இதயத்தை காய படுத்துகிறாய் அதில் இருப்பது நீ என்று தெரியாமல்.

மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல் ‘அங்கேயே நில். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு செங்கல் உன் தலையில் விழும்’ என்றது. அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு பெரிய செங்கல் அவனுக்கு முன்னால் விழுந்து அவனை நடு நடுங்க வைத்தது. இன்னும் சற்று தூரம் நடந்தான். மீண்டும் அதே குரல் ‘அங்கேயே நில். இல்லையேல் பிரேக் பிடிக்காமல் வரும் ஒரு கார் உன்னை மோதி நீ சமாதியாவாய்’. அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு கார் படு வேகமாக அவனைக் கடந்து போனது. அவன் வெலவெலத்தான். ‘நீ யார்… ‘ பயந்த அவன் கேட்டான். ‘நான் உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பப்பட்டவன்’ குரல் சொன்னது. எரிச்சலடைந்த் மனிதன் கேட்டான்… ‘இப்போ எல்லாம் ஓடி ஓடி வந்து காப்பாத்தறியே.. நான் கல்யாணம் கட்டிகிட்டப்போ எங்கே போய் தொலஞ்சே…!!!

பிடிப்பதற்கு காரணம் இருந்தும் பிடிக்காமல் போகிறது சிலரை.. வெறுப்பதற்கு காரணம் இருந்தும் வெறுக்க முடியவில்லை சிலரை..

கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை கிடைக்கும்.. ஆனால் கடவுளே வேண்டுமென்றால் தான் பெண் குழந்தை கிடைக்கும்..!

பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.

சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள்.. செயல்படும் போது உறுதியோடு செயல்படுங்கள்.. விட்டுக்கொடுக்கும் போது மன நிறைவோடு விட்டுக்கொடுங்கள்.. இனிய காலை வணக்கம்!

லவ் ,பண்றதுலாம் ரொம்ப கஷ்டம் பாஸ்....!! Valentines day special!! அவங்ககிட்ட பேசிட்டே இருந்தா ,போடா "Torture" னு ,சொல்வாங்க.. பேசாம இருந்தா, போடா "waste"ன்னு வாங்க ..! மொரச்சா "கெட்டவன்".. சிரிச்சா "பல்"ல காட்றவன்..! Di.. போட்டு பேசுனா limit-a cross பண்றவன்.. பேசாம இருந்தா "டம்மி பீஸ்"..! தப்பா பேசுனா "தப்பானவன்".. decent-a பேசுனா "tube light"..! சண்டை போட்டதும் போனாபோதுனு நம்பளே போய் பேசுனா "சொரனகெட்டவன்".. பேசலனா "Ego" பிடிச்சவன்..! பையன் வேற பொண்ணுகிட்ட பேசுனா "துரோகமாம்".. அதே பொண்ணுங்க வேற பசங்ககிட்ட பேசுனா "Just friend"ஆம்..! இந்த பசங்கள ஆண்டவன்தான் காபாத்தணும்..!!

உடல் நலமில்லாத கணவனை, மருத்துவரிடம் அழைத்து சென்றார் அவர் மனைவி.. டாக்டர் மனைன்வியிடம் சொன்னார் : "நல்ல சத்தான காலை உணவை, அன்பாகவும், அமைதியாகவும் கொடுங்கள். சுவையான இரவு உணவுடன், உங்கள் பிரச்சனைகளை அவரிடம் பேசாதிருங்கள். சீரியல் பார்ப்பதை தவிருங்கள். புது நகைகள் வேண்டும் என்று அவரை தொல்லை படுத்தாதீர்கள். இப்படி, ஒரு வருடம் செய்தால், உங்கள் கணவர் பிழைத்து கொள்வார்", வீட்டுக்கு செல்லும் வழியில் கணவர் கேட்டார் : "டாக்டர், என்ன சொன்னார்?" அதற்கு மனைவி கூறினாள் "பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்...."

டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்.... பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்... டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !! பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு.. நீயா? நானா?..

ஹலோ தோத்த கட்சி ஆபிஸுங்களா? " " ஆமா நீங்க யாருங்க.? " " நாங்க ஜெயிச்ச கட்சியிலே இருந்து பேசறோம்.." " ஓ.. எங்களை சீண்டுறிங்களா..? " " அட நீங்க வேற.. எங்க கிட்ட பட்டாசு தீர்ந்துடுச்சு உங்க கிட்ட சும்மா தானே இருக்கும் கொஞ்சம் தாங்க காசு கொடுத்துடுறோம்"

விவகாரங்கள் என்பவை வெளியேறுவதை விட நுழைவதற்கு எளிதானவை. - ஈசாப்

சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார் சபையே சிரிப்பாய் அதிர்ந்தது கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார் பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது!! அப்பாேது சார்லி சாப்ளின் கேட்டாராம் ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத நாம், ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறாேம் என்று!

கவிதைகளை தந்த என் காதல், கனவுகளை தந்த என் காதல், ஏனோ எனக்கு வாழ்க்கையை தர மறுத்து விட்டது..

மனைவி அமைவதெல்லாம்!! எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார். மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார். மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது. கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். (சுகி சிவம் எழுத்தில் ரசித்தது)

கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு.. கடவுளே கிடைத்தார் வரமாக.. என் அப்பா..

பாடத்தை படிக்கும் யாசிக்கும் இத்திருநாளில் மனதையும் படிக்க யாசிப்போம்.. கற்றுக்கொள்வோம் கல்வியையும் வாழ்கையையும்.. கடந்து செல்வோம் கல்வி படிகளை.. தொடர்ந்து வெல்வோம் வாழ்க்கை படிகளை.. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் !!!

ஒரு மடங்கு திறமை, இரு மடங்கு தேடல், மூன்று மடங்கு பொறுமை என்ற விகிதத்தில் உன்னை நீ தயார் படுத்தினால் மட்டுமே உன் லட்சியம் இலக்கை அடைய முடியும்...

தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ? - மகாகவி சுப்பிரமணிய பாரதி.

அன்பு பொங்க அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்.. பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..! ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்..!

புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்க.. வாழ்கை ஒரு போர்களம். அழகான மாலை வணக்கம் நண்பர் கூட்டமே...

கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க? மனைவி:: நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே

உன் நண்பனிடம் பொய் சொல்லும் போது, அதை அவன் நம்பிவிடும் முட்டாள் என்று மட்டும் நினைக்காதே.. உன்னை காயப்படுத்த கூடாது என்பதற்காக தனது உணர்சிகளை மறைத்துக் கொள்கிறான்..!!

விழுதல் என்பது வேதனை.. விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை..!

ஆசிரியர்: நீ எதுவரைக்கும் படிக்கு ஆைசபடுர மாணவன்: ஸ்கூல் பெல் அடிக்கர வரைக்கும் சார்

பிரசவ வலி பற்றி என்ன தெரியுமென்று ஆண்களிடம் கேட்கும் பெண்கள்.. இரண்டு உயிர்களும் பிழைக்க வேண்டுமே என்ற உயிர் பதறும் வலியை அறிந்திருக்க மாட்டார்கள்..!!

நீ என்னிடம் பேசியதை விட எனக்காக பேசியதில் தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை..

ஒரு ஆபிரேசன் தியேட்டரில்.. டாக்டர் நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர்.. நோயாளி: இது எதக்கு டாக்டர்? டாக்டர்: இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை காட்டும் கருவி... இன்னும் ஒன்றை ஓட்டினார்.. நோயாளி: இது எதக்கு டாக்டர்? டாக்டர்: இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி. இப்படி பல அவர் மீது ஒட்டப்பட்டது.. நோயாளி: இதல்லாம் இயங்க கரண்ட் தானே வேணும் டாக்டர்? டாக்டர்: நிச்சயமா அதில் என்ன சந்தேகம்? நோயாளி: ஆப்பிரேசன் செய்யும் போது கரண்ட் நிண்டா? என்ன செய்வீங்க டாக்டர்? டாக்டர்: சிரித்தார்.. நர்சு: ஏன்? டாக்டர் சிரிக்கிரீங்க? டாக்டர்: கரண்ட் நிண்டா என்ன செய்வீங்கனு கேட்கிறார்... நர்சு: போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு...

என்னை சந்தோஷபடுத்தி சிரிக்க வைத்ததும் நீதான்.. என்னை விட்டு தூரம் சென்று அழ வைத்ததும் நீ தான்.. இன்று உன்னை நினைத்து அழுது சிரிக்கிறேன்.. அன்பினால் பைத்தியமாகி....

பல தருணங்களில் தனிமை மட்டுமே நினைவுகளின் வலியை உணர்த்துகிறது...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..! இரண்டுமே உன்னை காயப்படுத்தும்..!

வருஷம்பூரா பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், திடீர் புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப் பட்டதால் மனம் வெறுத்துப் போன ஒரு விவசாயி கடவுள்கிட்டே கேட்டான்,” ஏன் ஆண்டவனே உனக்குக் கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? மழையை அளவாப் பெய்ய வைச்சா என்ன? ஏன் இப்பிடி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களையெல்லாம் அழிக்கறே..அதே மாதிரி காத்து அடிச்சாப் பத்தாதா? புயலாய்த்தான் அடிக்கணுமா? வெயில் அடிச்சாப் பரவாயில்லே...ஒரேயடியா இப்பிடி வறட்சி வர வைக்கணுமா? “உனக்கு பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு கொஞ்சம் கூடத் தெரியலை...எங்கிட்டே அந்த சக்தியைக் கொடு. உற்பத்தியைப் பெருக்கி நாட்டில் சுபிட்சத்தை உண்டாக்கிக்காட்டறேன்”ன்னு சவால் விட்டான். கடவுளும் சரி உன் இஷ்டம். இனி இயற்கை உன் சொல்படி நடக்கும்னு அவனுக்கு சக்தியைக் கொடுத்தார். அன்னேலேர்ந்து அந்த விவசாயி இட்ட கட்டளைக்கு நிலம், நீர், ஆகாயம், வெப்பம், காற்று எல்லாம் கட்டுப் பட்டுச்சு. மழை அளவா பேஞ்சுது. காற்று மிதமா வீசிச்சு. நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்துச்சு. வெப்பம் அளவோடு இருந்துச்சு. பயிர்கள் அமோகமா விளைஞ்சிருப்பதைப் பாத்து அவனுக்குப் பெருமிதம் பிடிபடலை. கடவுளைக் கூப்பிட்டு..பாத்தீங்களா ஆண்டவனே. நான் எப்பிடி விளைச்சலைப் பெருக்கி இருக்கேன்ன்னு சொன்னான். கடவுளும் சரி..அறுவடை செய் என்று அருகில் நின்று வேடிக்கை பார்த்தார். விவசாயி அறுவடை செய்து முற்றிய கதிர்களை உதிர்த்துப் பார்த்தான். நெல் சிதறியது. ஆனால் உள்ளே அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தன. அவன் திகைத்துப் போயி இறைவனை ஏறிட்டுப் பார்த்தான். கடவுள் அமைதியாகச் சொன்னார்...இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயலைக் கொடுக்கும் போது பயிர் தன் வேரை பலப் படுத்திக்கும். நான் வரட்சியைக் கொடுக்கும் போது தன் வேர்களை நன்றாக பாய விட்டு நீரைத் தேடி வளரும். நான் நீரை அதிகமாகக் கொடுக்கும் போது அதில் வேர்கள் அழுகிப் போகாமல் தன் வேர்கால்களை வலுவாக்கிக் கொள்ளும். அதனால் அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கேற்றபடி மாறி நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும்...ஆனால் நீ வளர்த்த பயிர்கள், சகல வசதியும் சுகமாய் கிடைத்ததும்...சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறி விட்டது. இது விவசாயிக்கு மட்டுமில்லை. நம் குடும்பத்துக்கும் பொருந்தும். பிள்ளைகளுக்குக் குடும்பக் கஷ்டம் தெரியாமல் சுகமாக வளர்த்தால் அவர்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் எந்தவிதப் பலனும் இருக்காது...ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்து வளர்ந்த பிள்ளைகளே எதிர்காலத்தில் ஏற்றமிகு பலனைத் தருவார்கள்..

கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.

ஆசைக்காக காதலித்து இருந்தால் எவளோ ஒருத்தி என்று விட்டுருப்பேன்.. வாழ்க்கைக்காக காதலித்தேன், அதனால் தான் இன்னமும் வலிக்கிறது என் இதயம்...

உன் கனவுகளை பின் தொடராதே.. துரத்திச் செல்..

அன்பினால் அனைவரையும் அரவணைக்க விரும்பும் அன்பானவர்களுக்கு.. அன்பான காலை வணக்கம் இந்நாள் இனிய நாளாகட்டும்

சில உறவுகளிடம், பேசி பயனில்லை என்னும் போது மௌனம் சிறந்தது.. பேசுவதிலே அர்த்தம் இல்லை என்னும் போது பிரிவும் சிறந்தது..

கண்களால் பார்க்க மட்டுமே முடியும் என எண்ணியிருந்தேன்.. ஈர்க்கவும் முடியும் என்பதை உன் கண்களைக் கண்ட பின்பு தான் கண்டு கொண்டேன்..

நம்மால் சிறப்பாக செய்ய முடிகிற செயலை இன்னொருவன் ஏனோதானோவென்று செய்து முடித்து, பேர் வாங்கிச் செல்லும்போது, அவன் அதிர்ஷ்டக்காரன் என அங்கலாய்ப்பதைவிட, நாம் முயற்சிக்கவில்லை என்கிற மெய்யை உணர்ந்துகொண்டால், ஜெயம் உண்டாகும்.

கதை சிறுசு, கருத்தோ பெரிசு - இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”. கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்). தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள் விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்? அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்” சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள், "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”. இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான். அவள் கேட்டாள் "நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான். உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள். அவள் சொன்னாள், "நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம்?” என்றாள். அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று, அவள் சொன்னாள், "முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.. ஆம்! பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். அனைவரும் புரிந்து செயல்படுங்கள்! மனசை தொட்ட பதிவு..!!

பொறுமையா படிங்க வாழ்வின் மிகப்பெரும் தத்துவ கதை: ஒரு காட்டில் சிங்கத்துக்கு திருமணம். மற்ற எல்லா மிருகங்களும் கொஞ்சம் தள்ளி நின்று பார்த்துக்கொண்டு இருந்தன. தூரத்தில் நின்று வாழ்த்துச் சொல்லின. ஆனால் ஓர் எலி மட்டும் சிங்கத்தின் பக்கத்தில் வந்து கைநீட்டி வாழ்த்துச் சொன்னது. சிங்கத்துக்கோ கோபம். "என்ன தைரியமிருந்தால் என் பக்கத்தில் வந்து வாழ்த்து சொல்வாய்?" என கேட்டது. அதற்கு எலி சொன்னது "கல்யாணத்துக்கு முன்னாடி நானும் சிங்கம்தாண்டா..."

திருக்குறளை வாழ்றதுக்காக படிச்சவங்கள விட "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதா அதிக பேரு..!

அர்த்தமில்லா வாழ்க்கையில் ஆயிரம் அர்த்தங்களை அரைநொடி பார்வையில் தந்தது காதல்

பணத்தை இரட்டிப்பாக்க அதிவேகமான வழி.. பாதியா மடிச்சு பாக்கெட்-லெ வெச்சுகோங்க..

சுவாசம் பெரும் முன்பே அவளின் பாசம் பெற்றுவிட்டேன்.. கருவறை என்னும் கோவிலில்..!

எத்தனை முறை சண்டை போட்டாலும், தேடிவந்து பேசும் தெய்வம் என் தாயை தவிர வேறேதும் உண்டோ இந்த உலகினிலே..!

உன் கவவுகளை கலைப்பது தோல்வி அல்ல - சந்தேகம்!

இரு கண்களின் கதை : இரு கண்களின் உறவை பற்றி தெரியுமா???.. அது ஒன்றை ஒன்று பார்த்ததில்லை.. ஆனால் ஒன்றாக இமைக்கும், ஒன்றாக நகரும், ஒன்றாக கலங்கும், ஒன்றாக பார்க்கும், ஒன்றாகத உறங்கும்.. இப்படி எதை செய்தாலும் ஒன்றாகத் தான் செய்யும்.. அவ்வளவு சக்தி வாய்ந்த உறவு அது...!! இருப்பினும்... ஒரு அழகான பெண்ணை பார்க்கும் போது மட்டும், ஒரு கண் மட்டும் கண்ணடிக்கும்.. மற்றொன்று அடிப்பதில்லை.. கதை நீதி : ஒரு அழகான பெண்ணால் எந்த ஒரு உறவையும் உடைத்து விட முடியும்..!!!

அழுத்தி கொடுக்கும் அன்பு மகளின் ஆசை முத்தம் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கும் தந்தை.. அன்னையை கண்டேன் மகளே உன் வடிவில்...

அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! - சேகுவாரா

மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை - மனதை வருடிய வரிகள்

தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்

நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய வினயாகர்ச் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!!

எந்த ஒரு பெண்ணையும் முழுமையாக புரிந்துகொள்ள முயற்சிக்காதே.. முடிவில் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விடுவாய்.. அல்லது பைத்தியமாகி விடுவாய் :)

ஒருவருக்கு நம்மை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் மீது நாம் காட்டும் அன்பு தொல்லையாகத்தான் தெரியும்...

உண்மையான கல்வியை என்னவோ இன்னும் நம்மால் வகுக்க முடியவில்லை…. நான் எதற்கும் இலக்கணம் வகுப்பது இல்லை; ஆனால் அதை ஒருவாறு கூறலாம் - உண்மையான கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல; அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது. - விவேகானந்தர்

காலையில் உன் வீட்டுக்கு வந்தேன்.. மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. என் அப்பாவை போலவே உன் அப்பாவும் இவ்வளவு கேவலமாக உன்னை திட்டினாரே.. கவலப்படாத மச்சி.. ஹேப்பி மார்னிங்!

ஒருவர் உங்களைப்பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லிவிட வேண்டுமானால்... நீங்கள் அவரின் எதிரியாக இருக்க வேண்டும் ..! மாலை வணக்கம்..!

பேசாம காளைகளை நாலு டீமா பிரிக்கறோம்.. ஏலம் விட்றோம்.. அபிஷேக் பச்சன்,ஷாருக்கான், அம்பானி, மல்லைய்யா நாலு பேரையும் ஆளுக்கொரு டீமுக்கு ஓனர் ஆக்கறோம்.அப்புறம் பாருங்க நடக்கற கூத்தை.உலக அளவுல நம்ம ஜல்லிக்கட்டு பேமஸ் ஆயிடும். JPL.. Jallikattu Premier League..!!

என் வேலையை நான் மிகவும் ரசிக்கிறேன்..விடுமுறை நாட்களில்..

சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா? சர்தார் B.A (Bachelor Again). சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா? சர்தார் M.A (Married Again)..!!

வாத்தியார்: "எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியலையோ அவன் ஒரு முட்டாள்… புரிகிறதா?" மாணவன்: "புரியல சார்.."

என்னை பெண் பார்க்க வந்தன்னிக்கு நீங்க டிபனை தொடவே இல்லையே, ஏன்?" "ரெண்டாவது ஷாக் எதுக்குன்னு தான்!!"

உண்மை என்பது பூட்டி வைக்கப்படும் பொக்கிஷகம் அல்ல. அது உரிமைப் போராட்டத்தின் வெற்றிக்கொடி! அது பலமுறைகள் கிழிக்கப்படலாம். ஆனால் அதற்கு மரணம் இல்லை. -வால்டேர்

நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயபடுத்தும் போது தான்.. இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்க தோன்றும்..

அட்சய திருதியை (09/05/2016) நாளின் சிறப்புக்கள்..! 1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள். 2.கங்கை நதி பூமியை தொட்ட நாள். 3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் . 4.குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள். 5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள். 6.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள். 7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள். 8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள். 9.அன்னபூரணி தேவி அவதரித்த நாள். 10.இந்நாளில் தான, தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும். தங்கமோ,நகையோ வாங்க சொல்லி இந்து தர்மம் கூறவில்லை. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். படித்தில் பிடித்தது.. இனிய காலை வணக்கம்!!

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிகளுக்கும் அருகதையுள்ள உயிர் என்று மதிப்பதில்லை. -தந்தை பெரியார்.

"நம்ம வீட்டு ரகசியம் வெளியில் தெரிஞ்சிடக் கூடாது".. "அப்பறம் ஏங்க நான் அடிச்சா நாலு தெருவுக்குக் கேக்கிற மாதிரி கத்தி மானத்தை வாங்குறீங்க?"..

நட்பு.. ஒரு தோழனிடம் உணரும் தாயின் அன்பு.. ஒரு தோழிக்கு விலை மதிக்கக் முடியாது பொக்கிஷம்..!!

மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க! கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!

உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்..!!

இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய். - அரிஸ்டாட்டில்

பதறாத காரியம் சிதறாது!

நேற்று நானாக.. இன்று நீயாக.. நாளை நாமாக வாழ ஆசை..!!

வலிக்காமல் குட்டுவது எப்படி என்பது தங்கைகளுக்கு மட்டுமே தெரியும்.. அதுப்போல் வலிக்காமல் வலித்ததுபோல் நடிக்க அண்ணன்களால் மட்டுமே முடியும்..!!

நம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - பல் நாக்கிடம் கூறியது : "நான் உன்ன ஒரு கடி கடிச்சா போதும்..மவனே, செதரிடுவே..!" நாக்கு பல்லிடம் : "நான் ஒரு வார்த்தை தப்பா பேசினா போதும், உன்னோட 32 பல்லும் செதரிடும்..!"

ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்... மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...

யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே ஒரு முறை நீ மாற்றினால் ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டியிருக்கும் -கண்ணதாசன்

ஏறி, குளம், ஆறு, குட்டைன்னு நான் இருக்க வேண்டிய இடங்களை நீங்க ஆக்ரமிச்சீங்க.. பூமிக்குள்ள போறதுக்கும் வழி இல்லாம பிளாஸ்டிக், காங்கிரீட் குப்பைகளால் என் பாதையை அடிச்சீங்க.. திக்கு தெரியாமத்தான் தெருவுலயும், சாலையிலும் தேங்கி போராடிக்கிட்டிருக்கேன்.. வெள்ளம்னு பேரு வைக்குறீங்க..!!

கல் தடுக்கி விழுந்ததில்லை,உன் கண் தடுக்கி விழுந்துவிட்டேன்… காதலில்..

கண்ணீரும் இனிக்கும்.. காத்திருப்பும் பிடிக்கும்.. தோழி நீ அருகில் இருக்கும் பொழுதுகளில்..

10th ரிசல்ட் பாத்துக்கொண்டிருந்த ஒரு பையன்கிட்ட தம்பி என்ன மார்க்குன்னு கேட்டேன் 490ன்னு சொன்னான்... நான் ஒவ்வொரு பாடமா மார்க் கேட்டேன்.. TAMIL - 70. ENG - 66. MATH - 75. SCI - 80. SOSC - 70 ன்னு சொன்னான் என்னப்பா கூட்டுனா 361 தானே வருது 490ன்னு சொல்றியே.. உன் பேரு என்னப்பான்னு கேட்டேன். குமாரசாமின்னு சொல்லிட்டு என்னை நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு போறான்....... புரிலையா!?.. நல்ல யோசிங்க..!!

காதலனாக தோழனாக கணவனாக இல்லாமல் ஏதேனும் ஒரு பெண்ணிடம் அண்ணனாக பழகிப் பார்.. அந்த உறவு தரும் பாசமே வேறு...

புத்தரிசி புதுப்பானை பொங்கலுடன் கதிரவனை வணங்கி கொண்டாடுவோம் பொங்கலை.. பழயன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையை மீறாமல் இருக்கும்படி கொண்டாடுவோம் இந்த ஆண்டின் பொங்கலை!!

அழ வைப்பது நீ என்று தெரிந்தும் அடம் பிடிக்கிறது என் கண்கள் உன்னை தான் காண வேண்டும் என்று..!

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

டாக்டர் : ஆபரேஷன் முடிஞ்சு நீங்க நடந்தே வீட்டுக்கு போகலாம்.. நோயாளி : ஆட்டோவுக்குக் கூட காசு இருக்காதா டாக்டர்?

இந்த உலகத்தில் நாம் அனைவரும் பயணிகள்; நமது பயணத்தில் நாம் கண்டறியக்கூடிய சிறந்த விஷயம் நேர்மையான நண்பர்களே. - ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்

வலி தந்தவரை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே..!

நான் நேசித்த முதல் பெண்ணும் என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே அம்மா..!!

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்.. தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !! - பிடெல் காஸ்ட்ரோ

வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவனை விட... கூச்சமின்றி கேட்பவனுக்கே வாய்ப்புகள் அதிகம் இந்த உலகில்.. மாலை வணக்கம்!

மனைவி: "பின்னாடி figure இருந்தா கண்ணு தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான்... நீங்க சிரிக்கிறீங்க?" கணவன்: "உன்னை பொய் Figureன்னு சொல்றான், அவனுக்கு தான் கண்ணு தெரியல.. அத நெனச்சித்தான் சிரிக்கிறேன்.."

"நான் உன்னை விரும்புகிறேன்". "நான் உன்னை நேசிக்கிறேன்". இது இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? இதற்கு புத்தர் கொடுத்த அருமையான, மிக எளிமையான விளக்கம் : "நீ ஒரு பூவை விரும்பும்பொழுது, அதை பறித்து விடுகிறாய்.. ஆனால் அந்த பூவை நீ நேசிக்கும்போழுது, அனுதினமும் தண்ணி ஊற்றி வளர்க்கிறாய்.." இதை புரிந்தவனுக்கு, உலகம் புரியும்!

ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

தெரிஞ்சவங்க கிட்ட கொடுத்த பணமும்.. தெரியாதவங்க கிட்ட கொடுத்த அன்பும்.. கண்டிப்பா வாழ்க்கைல மறக்கவே முடியாத அளவுக்கு ஒரு பாடம் கற்று கொடுக்கும்.. இனிய காலை வணக்கம்....

நீரில் குளித்தாலும் நெருப்பில் எரிந்தாலும் தங்கம் நிறம் மாறாது. அதுபோல் நீ அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் என்றுமே என் நட்பு மாறாது...

நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..

மனோ தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான்.. கடமையை செய்தால் வெற்றி.. கடமைக்கு செய்தால் தோல்வி!

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.

தோல்வி என்பது வீழ்வது அல்ல. மீண்டும் எழாமல் இருப்பது!

எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள் - மகாத்மா காந்தி

மாணவர்களுக்கான மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது; மாணவர்களை கேள்வி கேட்க வைப்போம். - அப்துல்கலாம்

காயங்கள் மன்னிக்கப்பட்டு விடலாம் ஆனால் மறக்கப்படுவதில்லை. - ஈசாப்

கற்றவரும் அறிஞரும் வீரர்களும் ஒரு நாளும் பணத்தை வாழ்வின் லட்சியமாக கொள்ள மாட்டார்கள். - ரஸ்கின்

நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று சந்தோஷப்படுவதா.. இல்லை கடைசி வரை நண்பர்களாகவே இருப்போம் என்று வருத்த படுவதா என்று தெரியவில்லை.

பெரிதாக யோசி. சிறிதாக தொடங்கு. ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது..!

பத்து மாதம் சுமக்கவில்லை.. ஆனால் உன்னிடத்தில் பார்கிறேன் தாயின் மரு உருவம்..

நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.. கஷ்டகாலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்வோம்..

"நீதிக்கதை" பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்." அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது. நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா? கதை பிடித்திருந்தால் மற்றவருக்கும் பகிரவும்...

எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், சிலரிடம் நம்பிக்கை வையுங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். - வில்லியம் ஷேக்ஸ்பியர்

அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம். நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது - கவிஞர் கண்ணதாசன்

ஒரு வார்த்தையில் உயிர் விடுவதும், ஒரு வார்த்தைக்காக உயிர் விடுவதும் உண்மையான காதலினால் மட்டுமே நடக்கும்..!!

ஹோட்டல் ஓனர்: "சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?" சர்தார்: "மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!"

பொய்யான அன்பை தேடிச் செல்லும் சிலர், உண்மையான அன்பை மதிப்பதில்லை....!!

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் சரிசமமாக ஏற்றுக் கொள்பவனே வாழ்க்கையில் இறந்தும் நிலைத்து வாழ்கிறான்..!!

வெற்றியாளர்கள் அசாதாரண விஷயங்களை செய்பர்கள் அல்ல.. சாதாரண விஷயங்களை கூட அசாதாரணமாக செய்பவர்கள்!!

அந்தந்த ஊர்காரர்கள் வழி சொல்லும் சுவாரஸ்யம்.. கூகிள் மேப்களில் ஒருபோதும் கிடைப்பதில்லை..

இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ் மனது தான்.. அது என்ன நினைக்கிறதோ, அதை நோக்கியே உன் வாழ்க்கை பயணம் அமைகிறது...!!

நினைவுகளை சுமந்து வாழும் பாசம், நிஜமான உள்ளங்களின் சுவாசம்..!

நாம் எதைப் பெற்றிருக்கிறோம் என்பது முக்கியமல்ல. பெற்றிருப்பதை எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

போராடி தோற்றுப்பார் !! உன்னை ஜெய்த்தவனும் உன்னை மறக்கமாட்டான் !!

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால், எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும். இனிய காலை ஆகட்டும்!

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

"இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க? மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?" "இப்ப மருந்து கொட்டிடுச்சி."

விதி ஒரு கதவை மூடும் போது, நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கிறது...

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது... செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது...

நாம் அமைதியை பெறுவதற்காகவே போய்க்கொண்டிருக்கிறோம், அதற்காக சண்டைக்யிட்டுக் கொண்டாலும் கூட. - ட்வைட் டி ஐசனோவர்

நீ நேசித்த இதயத்தை ஏமாற்றி விடாதே பின்பு நீயே தேடிச்சென்று நேசித்தாலும் அது உன்னை நேசிக்காது..

சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு.. வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும்..

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிறந்தது. மறு வருடம் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த சீன இளைஞன் இறந்து போனான். இந்தியப் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பதற்காக உறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் கூடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்ணின் காதல் கணவன் இறந்து போனது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அந்தப் பெண்ணோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!" என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாக அவள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்ததைக்கண்ட ஒரு இளைஞன் அவளிடம் சென்று கேட்டான். "சகோதரி! எனக்குத் தெரியும் என்கிற வார்த்தையை நீண்ட நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். அர்த்தம் புரியாமல் கேட்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. இப்பொழுதாவது தெளிவாகச் சொல் உனக்கு என்ன தெரியும்?" அழுது கொண்டே சொன்னாள். "எனக்குத் தெரியும். சைனா பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்" என்று...

அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில். தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்! - கவிஞர் கண்ணதாசன்

ஆயிரம் பேரை நண்பராக வைத்திருப்பது உனக்குப் பெருமையல்ல... ஆயிரம் பேர் எதிர்க்கும் போது உனக்காக அவர்களை எதிர்க்கக் கூடிய நண்பன் ஒருவனை வைத்திருப்பதே உனக்குப் பெருமையாகும்...

ஒரு நாள் ISIS தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழி மரித்தனர். ISIS தீவிரவாதி - நீ எந்த மதம்? அந்த மனிதர் - நாங்கள் முஸ்லிம் (அவர்கள் உண்மையில் கிருஸ்டியன்) ISISதீவிரவாதி - அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்கலாம். (காரில் இருந்தவரின் மனைவி நடுங்கிவிட்டாள்) ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி பைபிளில் இருந்து சில வரிகளை கூறினார். ISIS தீவிரவாதி - சரியாக கூறினாய் நீ செல்லலாம். கார் சிறிது தூரம் நகர்ந்ததும் அவரின் மனைவி "எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள், ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?" அவர் - அவர்களுக்கு குரான் தெரியாது.! மனைவி - அது எப்படி உங்களுக்கு தெரியும். அவர் சிரித்துக்கொண்டே "அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்". எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை. தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது...... படித்ததில் பிடித்தது........

உன் அன்பை பத்திரமாக என் இதயத்தில் வைத்திருந்தேன்.. பின்புதான் தெரிந்து கொண்டேன் உன் அன்புதான் என் இதயத்தை பத்திரமாக வைத்திருக்கிறது என்று..!!

சண்னடயிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின், நீ இழந்தது சிறந்த நண்பனை...

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் ! நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.! என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.! தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார். அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!! தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக ! நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.! எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!! நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே." உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!

உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…! என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே.. மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே.. அழுகையில் ஒருவரையும் நம்பாதே..!

மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் shave செய்வது தந்தையின் பாசம்.

இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். - கவிஞர் கண்ணதாசன்

நீ யாருக்கும் பக்கத்திலிருக்காதே, தூரத்திலேயே இரு.. பக்கத்தில் இருக்கும் இமையைப் பார்க்க முடியாத கண்கள், தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்த்து விடுகின்றன.. -கன்பியூசியஸ்

எண்ணங்கள் ஈடேறும் எந்நாளும் நன்னாளே.. இந்நாளும் அவ்வாறே இனியதாய் அமைந்திடும்.. இனிய காலை வணக்கம்..!!

கவிதை சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன் ? அனைத்தையும் நீ உனக்குள் வைத்திருக்கிறாய்..... ஒரு வார்த்தையாவது கொடு.... மாலை வணக்கம்! மட்டும் சொல்லி கொள்கிறேன் ....

உன்னை பற்றிய அதீத தேடலில் நான் தொலைத்தது என் நிம்மதியையும் வாழ்க்கையையும்...!

நிலவையும் விண்ணையும் பிரிப்பது அமாவசை. என்னையும் அவளையும் பிரிப்பது அவள் அம்மா ஆசை.

முட்டாள்தனமான சொர்க்கத்தை விட, அறிவார்ந்த நரகம் சிறந்ததாக இருக்க முடியும். - விக்டர் ஹியூகோ

எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம்..!! HOW ? WHY ? யார் ? எப்படி ? ஏன் ? எங்கே ?

வாழ்க்கை ஒரு வட்டமா, கட்டமா, செவ்வகமான்னு தெரியலை.. ஆனா கஷ்டம்னு மட்டும் தெரியுது.

உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.

உனக்காக சிரிக்கும் உதடுகளை விட, உனக்காக கண்ணீர் விடும் கண்களை நேசிக்கத் தெரிந்து கொள்! அக்கண்ணீர் உப்பாக இருந்தாலும் உண்மையானது..!

வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும்.. இனிய காலை வணக்கம்..!!

ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால் முதலில் தாய்க்கு செய்..!! ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் முதலில் தந்தைக்கு செய்..!!

கணவன் : (ஹோட்டல் மேனேஜர் க்கு கால் செய்து).. சீக்கிரம் வாங்க!! என் பொண்டாட்டி கூட சின்ன சண்டை.. அவ ரூம் ஜன்னல் லெ இருந்து குதிச்சிருவேன்னு நின்னுட்டு இருக்க.. வந்து எப்பிடியாவது உதவி செய்ங்க..! மேனேஜர் : சாரி சார்.. இது உங்க குடும்ப பிரச்சனை.. நான் எப்படி தலை இடுவது.. கணவன் : ங்கொய்யாலே டேய்.. ரூம் ஜன்னல் திறக்க மாட்டேங்குது.. இது உங்க ஹோட்டல் பிரச்சனை!!!

அவள் புதையல் நிரம்பிய விழிகளுக்காக இமைகள் நடத்தும் முற்றுகைப்போர்... கண் சிமிட்டல்..!!

இந்நாள் உனக்கு எப்படி இருக்கும் என்பதை நீ கண்விழிக்கும் அந்த ஒரு நொடியே தீர்மானிக்கிறது.. நல்லதை நினைத்துக்கொள், ஒவ்வொரு நாளும் உன் வாசமே இனிய நற்காலை வணக்கம்

பொறுமை மற்றும் நேர்மை ஆகியவை மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு

சிறிய தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது. -கான்பூசியூஸ்

கையிலே பத்தாயிரம் இருக்கும் விஷயம் பிரபுக்கு மட்டும் தெரியவே கூடாது.. இல்லாட்டி வாங்க.. வைரம் வாங்கி தரேன்னு கூட்டிட்டு போயிடுவாரு..!

"என் மனைவிக்கு இருக்குற மாதிரி இறக்க குணம் யாருக்குமே இருக்காது.." "அப்படியா?!.. எப்படி சொல்ற.." "என்ன அடிச்சிட்டு ஒக்காந்து அழுவா பாருங்க....!!"

ஒரு நல்லப் புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம்.. ஆனால், ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.

யார் அதிகமாக கேள்வி கேட்கிறார்களோ, அவர்களே அதிகமாக கற்றுக்கொள்ளவும், தக்கவைத்துக் கொள்ளவும் செய்கிறார்கள். -பிரான்சிஸ் பேக்கன்

உன்னை பார்த்த அந்த முதல் நொடியும், உன்னை விட்டுப் பிரிந்த அந்த கடைசி நிமிடமும் ஒட்டிக்கொண்டது என் நினைவில்...

உயிரின் சுவாசம் மூச்சு கண்களின் சுவாசம் கனவு இதயத்தின் சுவாசம் துடிப்பு நாக்கின் சுவாசம் பேச்சு என் நட்பின் சுவாசம் நீ - படித்ததில் பிடித்தது

நீ யாருக்காககும் கண்ணீர் சிந்தாதே.. உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழவிட மாட்டார்கள்..

தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்..

கவலை உங்கள் பிரச்சனைகளை குறைப்பது இல்லை.. அவை குறைப்பது எல்லாம் உங்கள் நிம்மதியை தான்.. தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை எதிர் கொள்ள கற்றுக் கொள்வோம்.. உற்சகமானதொரு காலை வணக்கம்!

முந்தியெல்லாம் ஒரு பொண்ண காதலிக்க வெக்கறது கஷ்டம்.. இப்பல்லாம் அது நம்மள மட்டுமே காதலிக்க வெக்கருது தான் கஷ்டம்..!

எத்தனையோ உறவுகளை பிரிந்த போதெல்லாம் கலங்கிடாத கண்கள் இன்று உன் பிரிவால் கலங்கி நிற்கிறது

பிடித்த ஒரு விஷயத்தை உடனே செய்ய எந்த கவனமும் தேவைப்படுவதில்லை.. செய்யாமல் இருக்க முழு கவனமும் தேவைப்படுகிறது.. விடியல் வணக்கம்!

"எண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேரியா சென்னை வரைக்கும் வந்தே?" ஒருவன் : "சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது.. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நெனச்சுத்தான் ஏறினேன்.."

தாய் - கருவில் சுமப்பவள்! தாரம் - கழுத்தில் சுமப்பவள்! . தாய் - பெத்தெடுப்பவள்! தாரம் - தத்தெடுப்பவள்! . தாய் - இதயத் துடிப்பு தந்தவள்! தாரம் - இயக்கத்தில் துடிப்பு தருபவள்! . தாய் - அனைவருக்கும் முதல் தொட்டில்! தாரம் - இரண்டாவது தொட்டில்! . தாய் - உலகில் முதல் தெய்வம்! தாரம் - தாய்க்கு நிகரான தெய்வம்! தாய் - பந்தய களம்வரை அழைத்து வருபவள்! தாரம் - பந்தயத்தில் பங்கு பெறுபவள்! . தாய் - உயிர்! தாரம் - உடலும் உயிரும்! . தாய் - நேற்று இன்று! தாரம் - இன்று நாளை! . தாய் - உலகின் தோற்றம்! தாரம் - உலகின் வளர்ச்சி! . தாரம் - இல்லாமல் அமையாது சிறந்த தாய்மை!! தாய்மை - இல்லாமல் அமையாது சிறந்த பெண்மை!!! . இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு.... பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு..! இனிய மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்!!

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

கனவு பெரியாதாக இருக்கும் போது உழைப்பு அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்..!!

எங்கும் அரிதாரம் பூசிய #மனங்கள்.. அன்புடன் மாலை வணக்கம்..

தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை. - அப்துல்கலாம்

நட்பு என்பது ஒரு கைக்குழந்தை போல்.. யார் அன்போடு நடந்து கொண்டாலும் அவர்களோடு வந்து விடும்...

என்னை மயக்க பெண்களுக்கு சவாலாக இருப்பதினால், நான் இன்னும் ஒரு பிரம்மச்சாரி தான்!

அன்பு" யார் மீதும் காட்டலாம்.. ஆனால் "கோபம்" உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்..

ஒரு சிறிய அன்பை குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.

எதிப்பார்ப்பின்றி காரணமின்றி நாம் செய்வது அனைத்தும் நண்பனுக்கு மட்டுமே!! - இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்..! அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்..!

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!

நம்முடன் பழகும் மனங்களின் அழகை உனர்ந்திருக்கும் வரை, நாம் மிக அழகானவர்களாகவே காட்சி தருவோம்... மதிய வணக்கம்

யார் சரியானவர் என்பதை போர் தீர்மானிப்பதில்லை, மாறாக யார் வெளியேறுகிறார் என்பதை மட்டுமே தீர்மானிக்கின்றது. - பெட்ரண்ட் ரஸல்

ஒவ்வொரு ஆணின் இதயமும் ஒரு ஆலமர விழுது போல.. யாரோ ஒருத்தி ஊஞ்சல் ஆடி போயிருப்பா..!

ஒவ்வொரு மனிதனின் நினைவுகளும் அவனுடைய தனிப்பட்ட இலக்கியமாகும். - ஆல்டஸ் ஹக்ஸ்லி

இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது. இதயத்தைப் பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள்.

கவிதைக்கு தெரியாது கண்ணீரின் வலி..! ஆனால் கண்ணீருக்கு புரியும் கவிதையின் வரி..

காப்பர் வயர்ல கனெக்ஷன் கொடுத்தா அது "மின்சாரம்". மஞ்சள் கயிறுல கனெக்ஷன் கொடுத்த அது "சம்சாரம்".

மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே தவறுகள் அதிகம் தண்டனை தருகிறது...

விழிகளும் சுமை தான்.. மனதிற்கு பிடித்தவர்களை காண முடியாத போது..

நல்ல நண்பனிடம் எவ்வளவு கோபமும் காட்டலாம்... ஆனால், ஒரு நிமிடம் கூட சந்தேகப்படக் கூடாது...

போருக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது, நான் எப்போதும் கண்டறியும் ஒரு விஷயம், திட்டங்கள் பயனற்றவை என்பதே. ஆனால் திட்டமிடல் தவிர்க்க முடியாதது. - ட்வைட் டி ஐசனோவர்

நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட, உங்களால் இந்த நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுப்பார்க்க வேண்டும். - ஜான் எஃப் கென்னடி

மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..

மீசைய கொறைச்சா தான் தாடி நல்லா தெரியும்....!!! ஆசைய கொறைச்சா தான் வாழ்க்கை நல்லா இருக்கும்...!!! இனிய_காலை வணக்கம்

அப்பா .... 1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா... என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன். 2. மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை. 3. குழந்தைகளின் வரவிற்கு பிறகு, அவர்களின் நலனுக்காக எப்படிப்பட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா. 4.பிள்ளைகளின் இன்றையத் தேவைகளை விட, வருங்காலத் தேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு, அதற்காகத் தன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித உள்ளம் படைத்தவர். 5. மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர். 6. தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று பணி புரிந்து, சம்பாதித்து பணம் அனுப்பி, வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின் கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களை சகித்துக் கொள்ளும் தன்னலமற்றவர். 7. மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும் வரை ATM ஆக இருப்பவர். 8. கடைசி காலத்தில் பிள்ளைகளால் உதாசீனப்படுத்தப்பட்டாலும், அவர்களின் நல்வாழ்விற்கு ஆசைப்படுபவர்.

காலம் சென்றாலும், கனவுகள் மறைந்தாலும், கவிதைகள் அழிந்தாலும், என் உயிர் பிரிந்தாலும், காற்றோடு தொடர்ந்து வருவேன், உன் அன்புக்காக..!!

உன் மரணம் எத்தனை பேருக்கு மீளாத் துயரைத் தருகிறதோ….அதை வைத்தே நீ வாழ்ந்தாயா, பிழைத்தாயா? என்பதை கணக்கிட முடிகிறது.

கண்ணீர் துளி விலை மதிப்பில்லாது.. அதை பொய்யான உறவுக்காக வீணடிக்காதே...

முடிவு தெரியாத நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்கும்...

மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்.. என் அம்மா காலில் மிதி பட அல்ல.. என்னை சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக..!

ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்..

ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்.. ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும்..

நண்பர் 1: நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க? நண்பர் 2: சரியா சொல்லனும்னா 10 கிலோ 300 கிராம்.

குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் காட்டி குடுக்க கூடாதாது.. அது தான் நட்பு..

பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை..!

ஒருவர்: நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை டாக்டர்: நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை

அக்கு இல்லாமல் தமிழ் மொழி முழுமை ஆகாது ! அவ்வண்ணமே , நீ இல்லாமல் என் வாழ்வும் முழுமை ஆகாது! என் இனிய மாலை வணக்கம் !

: உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதை விட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு..! இனிய காலை வணக்கம்!

ஒரு சிறந்த மொழியானது பெரும்பாலும் எளிய வார்த்தைகளாலேயே உருவாக்கப் படுகின்றது. - ஜார்ஜ் எலியட்

வாக்கு என்பது துப்பாக்கி போன்றது; அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது. - தியோடோர் ரூஸ்வெல்ட்

அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே. - மனதை வருடிய வரிகள்

ஒரு கவனக் குறைவான வார்த்தை சர்ச்சையில் முடியும்!! ஒரு கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும்!! ஒரு கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும்!!..

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது. குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே. கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய் குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும் கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார். கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய். குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது. கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத்ப் தேவையில்லை. குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன். கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும். குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார். கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும். குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா. கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய். உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல் கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய். கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே. குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….

அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். - நெப்போலியன்

நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால், இன்னொரு தவறைச் செய்தவராகி விடுவீர்கள். -கண்பூசியுஸ்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடியும், நேரத்துக்கு தூங்குற ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பா..!!

பிச்சை போடுவது கூட சுயநலமே... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...

தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்களும் தாய் தந்தை தான்.

பயிற்சி களத்தில் வியர்வை சிந்த யோசிப்பவன் போர்க்களத்தில் ரத்தம் சிந்த நேரிடலாம்..!

உதிர்ந்த மலருக்கு ஒரு நாளில் மரணம்.. பேசாத உறவுக்கு தினம் தினம் மரணம்.. உரியவர்களிடம் உரிமையோடு பேசுங்கள்.. உறவுகளை அன்புடன் நேசியுங்கள்.. அன்பை மட்டும் சுவாசியுங்கள்..!!

இதயம் வலிக்கும் போது கண்கள் கலக்கினால் அது காதல். அதுவே கண்கள் கலங்கி இதயம் வலித்தால் அது நட்பு...

எல்லோருக்கும் பிடித்த மாதிரி நான் இருக்கணும்னு இறைவனிடம் வரம் கேட்டேன்... அவர் சிரிச்சுகிட்டே சொன்னார், "எனக்கே இன்னும் அந்த வரம் கிடைக்கல..!!"

விட்டுக் காெடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும், மன்னிப்பு காெடுங்கள் தவறுகள் குறையும்.. மனம் விட்டு பேசுங்கள் அன்பு பெருகும்... இனிய காலை வணக்கம்!

சேர முடியாத உறவின் மீது தான் நேசம் அதிகம் இருக்கும்...

நோயால் மரணமடைபவர்களை விட அச்சத்தால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம்.

தவறு என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமல் தவிக்கும் இதயத்தின் ஆசைதான் காதல்..

அம்மா அப்பா முக்கியம் தான்.. ஆனால் அதுக்காக மனைவியை ஒரு நாளும் விட்டு குடுத்து பேசக்கூடாது.. அவ அப்பா அம்மாவையே நம்மளுக்காக விட்டு வந்த உறவு..!!

பெண்ணாக பிறப்பதே வரம் என்று அறிந்தாள்.. தன் குழந்தைக்கு தாயாகும் போது...

ஒரு மனநல காப்பகத்தில் இரமேஷ் என்கிற ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு நாள் பிரதீப் என்கிற சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார் இரமேஷ். அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது. அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் இரமேஷை அழைத்து “உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்” என்றார். உடனே இரமேஷ் “சொல்லுங்க டாக்டர்” என்றான். “நீ உனது நண்பனைக் காப்பாற்றியபடியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். இது நல்ல செய்தி” “துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான்” டாக்டர் பேசி முடித்த உடன் இரமேஷ் ஆர்வமுடன் சொன்னார்.., “டாக்டர் … அவன் சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றினைக் கட்டி மரத்தில் தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் குணமாகி விடுவான் என்று....

தகுதிக்கு மீறி ஆசை படாதே.. அதே போல் தன தகுதிக்கு கீழ் இறங்கி உன்னை ஒருவர் நேசிக்கும் போது தூக்கி எறியாதே..!

ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீரை விட, அவர்களை இழக்கக் கூடாது என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு தான் வலி அதிகம்..

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் - மகாத்மா காந்தி

கடைசியில் நம் நினைவில் நிற்பது எதிரிகளின் வார்த்தைகள் அல்ல. நண்பனின் மௌனம் தான்.

ஒரு நாள் நீ வாழ்ந்த வாழ்க்கை உன் கண் முன் தெரியும்.. அதை ரசிக்கும் படியாக வைத்து கொள்.

நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

பாடிப் பாடிக் குத்துனாலும் பதறு நெல்லாகாது

ஒருமுறை மட்டும் வாழக்கிடைக்கும் வாழ்க்கை இது... வாழும் வாழ்க்கையை உனக்கு பிடித்த படியாக அமைத்துக் கொள்..!!

எனக்கு என்ன நடந்தது என்பது 10 சதவீதமும், அதை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது 90 சதவீதமும் கொண்டதுதான் வாழ்க்கை. - மனதை வருடிய வரிகள்

வாழ்கையில் இரண்டே வார்த்தைகள் பல கதவுகளை திறக்கும் - தள்ளு & இழு.

ஒருவர் உங்களைப்பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லிவிட வேண்டுமானால்... நீங்கள் அவரின் எதிரியாக இருக்க வேண்டும் ..! மாலை வணக்கம்..!

தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது..

உண்ணக் கனி, ஒதுங்க நிழல், உடலுக்கு மருந்து, உணர்வுக்கு விருந்து, அடையக் குடில், அழகு வேலி, ஆடத் துளி, தடவத் தைலம், தாளிக்க எண்ணெய், எழுதக் காகிதம், எரிக்க விறகு.. மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்.. மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்.. - வைரமுத்து

நீ யாருக்காக வாழ்கிறாயோ அவருக்காக சிலவற்றை விட்டுக் கொடு.. உனக்கென யார் வாழ்கிறார்களோ அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதே!

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு.. நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வோம்.. இணைந்து வாழ்வோம்.. இனிய மாலை ஆகட்டும்!

"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?" "சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்ல ஐயா??"

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.

சொந்தங்கள் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கைத்துணை என்னும் ஒரு சொந்தம் சரியாக அமைந்து விட்டால் ஆணும் பெண்ணும் அத்தனை உறவுகளையும் உலகையும் வெல்லலாம்.

ஏறி, குளம், ஆறு, குட்டைன்னு நான் இருக்க வேண்டிய இடங்களை நீங்க ஆக்ரமிச்சீங்க.. பூமிக்குள்ள போறதுக்கும் வழி இல்லாம பிளாஸ்டிக், காங்கிரீட் குப்பைகளால் என் பாதையை அடிச்சீங்க.. திக்கு தெரியாமத்தான் தெருவுலயும், சாலையிலும் தேங்கி போராடிக்கிட்டிருக்கேன்.. வெள்ளம்னு பேரு வைக்குறீங்க..!!

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.

நேசித்த ஒன்று என்னை பிரிந்தது.. என்னை நேசிக்க புதியதாய் ஒன்று பிறந்தது

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது.. ஏமாற மட்டுமே தெரியும்..

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது... நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?.. கடவுள் : தாரளமாக கேள்.. நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?.. கடவுள் : சத்தியமாக!.. நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?.. கடவுள் : என்னப்பா சொல்லுற நீ?.. நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்.. கடவுள் : ஆமாம்! அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டாய்.. நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.. கடவுள் : ஆமாம் எனக்கு தெரியும்.. நான் : சரி! பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்.. கடவுள் : ஆமாம்! தெரியும்.. நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.. கடவுள் : ஆமாம் அதுவும் தெரியும்.. நான் : வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.. கடவுள் : ஆமாம் தெரியும்.. நான் : அதை பிடிச்சி! இதை பிடிச்சி! முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யல.. இன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?.. (கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து! பேச ஆரம்பிக்கிறார்) கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்... நான் : (அதிர்ச்சியுடன்) ஓ.. கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா! நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.. நான் : (அடக்கத்துடன்) ஓ.. கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம் கடைசீயா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு! யாரும் அதை கவனிக்கல அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?.. நான் : (கண்கலங்கியபடி) ம்ம்.. கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்! அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.. நான் : ம்ம்.. கடவுள் : அப்புறம் அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய், ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன். என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.. நான் : இப்போ புரிகிறது இறைவா! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.. கடவுள் : மன்னிப்பு கேட்காதே! என்னை நம்பு, எப்போதும் எந்த சூழ்நிலையிலும். அது போதும்!.. நான் : நிச்சயமாக.. கடவுள் : நீ திட்டமிடுவதை விட உனக்காக நான் திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்.. நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதை புரிந்துகொண்டேன்.. கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்ல!!! முருகா முருகா..!!

எனது வெற்றி உடனடியானது அல்ல, ஆனால் நிச்சயமானது..!!

ஒருவரை கஷ்டப்படுத்தி நீ தேடும் சந்தோஷம்.. உனக்கு எப்போதும் நிலைக்காது..

நீ அடுத்தவருக்காக விளக்கை ஏற்றும்பொழுது, உன்னுடைய பாதையும் வெளிச்சமாகிறது !!

வீடு வரை "land line ".. வீதி வரை "coin booth ".. காடு வரை "cellu ".. கடைசி வரை "billu "..!!

அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்... மாணவன்: உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...

ஒவ்வொருவருக்கும் ஒரு முட்டாளின் உதவி தேவைப்படுகிறது.. தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்ள..!!

துன்பத்திலும் பழகுபர்கள்தான் உண்மையான நண்பர்கள்..! தேவைக்கு மட்டுமே பழகுபவர்கள் சுயநலவாதிகள்...

கண்ணீர் வராமல் காக்கும் இமைகள் தான் உறவுகள் என்றால், அந்த இமைகளையும் கடந்து வரும் கண்ணீரை துடைக்கும் கரங்கள் தான் நட்பு..!!

அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்..

பிறப்பால் மனிதனாக பிறந்தாலும் உருவத்தில் எருமை போல் இருக்கும் என் அருமை(எருமை) தோழனே, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!!

பசியால் வாடும் நேரத்தில், சோர்த்து விடாமல் இருக்க, உமக்கு நாங்கள் கொடுக்கும் பூஸ்ட்... மாலை வணக்கம்

சூரியன் உதித்தது.. காலை பிறந்தது.. ஞாயிறு விடிந்தது.. எல்லோருக்கும் சிறந்த ஓய்வு நாளாக அமையட்டும்.. இனிய காலை வணக்கம்..!!

சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்.

ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

என்னை பார்க்கும் போதெல்லாம் பொய்க்கோபம் கொள்கிறாய்.. எனக்குத் தெரியும் அது கோபமில்லை வெட்கம் என்று..

மனைவி : ஏங்க...! கிச்சன்ல அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க. கணவன் : எங்க வச்சிருக்கு காணமே? மனைவி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்? கணவன் : நல்லா தேடிட்டேன் பா.கிடைக்கல. மனைவி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா.உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க. நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க. இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேற.!! கணவன்: இல்ல...நெஜமாவே உப்பு டப்பாவே காணல டி. மனைவி: உங்களால ஒரு வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சு தான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன். கணவன் : ?????

உன்னால் காயப்பட்ட என் மனம் வலித்தது.. என் காதல் தோல்வியை எண்ணி அல்ல.. இந்த சப்ப பிகர கூட நம்மளால உஷார் பண்ண முடியலையேனு தான்..!!

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"

காதலில் காத்திருப்பது மட்டும் சுகமில்லை.. பிரியும் ஒவ்வொரு நொடியும் சுகமான நினைவுகள் தான்!..

உன் வஞ்சிக்கபடாத இந்த சிரிப்பில் தான், என் வாழ்கை அழகாக பயணிக்கிறது !

மகான் போல நீ வாழ வேண்டும் என்றில்லை.. மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..

நம்புங்கள்... ஒரு பொருள் அதன் இருப்பிடத்திலிருந்து ஒரு அடி, ஒரே ஒரு அடி தள்ளி இருந்தால் கூட, ஆண்கள் அது காணவில்லை என்று எண்ணுகிறார்கள்..

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்.... பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................ பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......! கல்லணை :- உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ? மாமல்லபுரம் :- கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ? அங்கோர்வாட்_கோயில் :- உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும். திருநள்ளாறு_காரி_ஈசன்_கோயில் :- எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை. கடல்_நடுவே_ராமேசுவரம் :- கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும். தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:- கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா? தொல்காப்பியமும் #திருக்குறளும் :- 5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது. 2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ? அணு :- அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு அணுவின் அணுவினை அணுகலுமாமே" -ஆசான் திருமூலர் சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார். சித்தர்கள் :- சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர். வானியல்_அறிஞர்கள் :- பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம். பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :- 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. உலகை_கட்டி_ஆண்ட_தமிழன்:- கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே. அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள். நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும். இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன். நிறைய பகிருங்கள்.. நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.

நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை.. நல்ல துணை இருந்தால் போதும்..

நாம் எங்கே போனாலும் நமது பின்னாலேயே வருவது... . . . . . . . . முதுகு.. மொறைக்காதீங்க... குட்ஈவ்னிங்...

வலியோடு நடத்தப்படுகிற போராட்டத்தால் மட்டுமே, வெற்றிகளை கூட விசித்திரமாய் கொடுக்க முடியும்..!!

எப்பொழுது ஒருவர் மீது நீ அதிகமாக கோபம் கொள்கிறாயோ.. அப்பொழுதே புரிந்துகொள் நீ அவர்கள் மீது உயிராய் இருக்கிறாய் என்று..!!

மாலை பொழுதினை இனிமையாக்குவது சூரியன் வீசும் செந்நிறக்கதிர்களா... இல்லை ஆவி பறக்கும் ஒரு குவளை தேனீரா... ரம்மியமான சூரியக் கதிர்களின் கதகதப்பில்... இதமான தேனீருடன்... இனிய மாலை வணக்கம் நட்புகளே...

மறந்து விடு மனசே.. அவனை மறக்க வேண்டும் என்று நினைப்பதை..

முகத்தில் தெரியும் அழுகையும் சிரிப்பையும் காண்பது உறவு, அழுகைக்கும், சிரிப்பிற்கும் பின் இருக்கும் காரணத்தை கண்டறிவது நட்பு..!!

தனது இலக்கைக் குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள். - அப்துல்கலாம்

நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பதிலாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போமேயானால் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது.

மனைவி: என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல.... கணவன்: அதனால தாண்டி அது சொர்க்கம் ...........! மனைவி: . . . . ????

வாழ்வில் சிலநேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம்.. அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள்.. மனம் தளராதீர்கள்.. அவைதான் நாளை நாம் பெறப்போகும் வெற்றியின் படிக்கட்டுகள்..!!

கெடுக்கினும் கல்வி கேடுபடாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

திருமணம் - ஓர் நக்கலான பதிவு..! "ஆணும் பெண்ணும், முன்பு இருந்திடாத பிரச்னையை, சேர்ந்து சமாளிப்பதே திருமணம் ஆகும்..!!"

பசங்க லவ் பண்ணும் போது - "என்ன பொண்ணுடா அவ!!".. லவ் தோல்விக்கு பிறகு "பொண்ணாட அவ து!!"..

புத்தகம் ஒரு சிறந்த துணை; ஏனென்றால் வீண் பேச்சு இல்லாத முழு உரையாடலை தருகின்றது. - ஹென்றி வார்டு பீச்சர்

சொந்தங்கள் எல்லாம் சிரித்து மணமக்கள் உம்முன்னு இருந்தா அது நிச்சய திருமணம்.. அதுவே, மணமக்கள் சிரிச்சுட்டு சொந்தங்கள் எல்லாம் உம்முன்னு இருந்தா அது காதல் திருமணம்..!

அவசியமானவற்றை விருப்பமானவையாக மாற்றிக்கொண்டால், வெற்றி எளிதாக நம் பக்கம் வந்துவிடும். - மனதை வருடிய வரிகள்

"டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்" "டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வச்சி இருக்கா.."

அழகான நாட்கள் , எப்போதும் அமைந்திடாது , அமையும் நாட்களை அழகாக வாழ்த்திட நல்லது ! இனிய வணக்கம் !

உங்கள் எதிரிகள் நலமாய் வாழட்டும்... உங்கள் மகிழ்ச்சியையும்.. வெற்றியையும் காண... விடியல் வணக்கம்!

வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும், நம்மை ஒரு படி மேலே எற்றிவிடவே வருகின்றன..

நமக்குப் பிடித்த ஒன்று எதிர்பாராமல், எவ்வித முயற்சியும் செய்யாமல் கிடைத்துவிடும்போது, அதை அதிர்ஷ்டம் என அழைப்பதில் தவறில்லை. - மனதை வருடிய வரிகள்

பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது. - ராபர்ட் கிரீன் இங்கர்சால்

எப்பொழுதும் ஞாயமாக இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை.. ஏன்.. கடவுள் கூட எப்பொழுதும் ஞாயமாக இருப்பது இல்லை..

தவறாக வேடுமானால் சிந்தியுங்கள். ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்..

எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.

திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்: "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு முதல் மந்திரி உங்க மாமனார்தான். அவர்தான் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை எல்லாம் கவனிச்சுக்குவார். "இங்க நான்தான் துணை முதல்வர். உள்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும். "என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் தொழில் துறை, போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித்துறை எல்லாம் பாத்துக்குவான். "என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறையையும், விளையாட்டுத் துறையையும் பாத்துக்குவா. "நீ எதைப் பாத்துக்கறே சொல்லு? உனக்கு உணவுத்துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்; சரிதானா?" சிரித்துக்கொண்டே மருமகள் சொன்னாள்: "ஐயோ அத்தை; பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு? நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க. நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

ஹலோ,சன் மியூசிக்கா? ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது. MAN : ஓ...அப்படியா மேடம். ANCHOR : ஆமா சார்.அப்பறம்,நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ,நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார். MAN : சரி மேடம்.நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். ANCHOR : தாராளமா சொல்லுங்க சார். MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க.அத எடுத்து திறந்து பாத்தேன்.பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம்,கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம். ANCHOR : அப்படியா சார்.அப்பறம் என்னாச்சு? MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு. S.முருகேசன், S/O சுந்தரம், மேலத்தெரு, காளியம்மன் காலனி மானாமதுரை கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம். ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர் சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா? MAN : இல்ல மேடம்.அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும். "நன்றி சொல்ல உனக்கு,வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க.நான் கிளம்புறேன். ANCHOR : அடடா...களவாணி பயகூடவா இம்புட்டு நேரம் பேசிட்டு இருந்தேன்.

வாரத்தின் முதல் நாள் எப்பவுமே உற்சாகம் தான்.. சென்ற வார இன்னல்கள் அனைத்தும் இவ்வார விடியலில் தவிடு பொடியாகிடும் எனும் நம்பிக்கையுடன் வாரத்தை துவங்குவோம்.. திங்கட்காலை வணக்கம்!

எதை விவரிக்க முடிகின்றதோ அது கவிதை அல்ல. - வில்லியம் பட்லர் ஈட்ஸ்

உள்ளங்கை பற்றி மெதுவாய் அழுத்தி, "ஒன்றுமில்லை.. எதுவும் நடக்காது.. நானிருக்கிறேன்" என்று சுவராய் நின்று காக்கும் நட்பு கிடைப்பது வாழிக்கையில் வரம்..!!

கடலிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்து வரும் அலைக்கோ கரையை கடப்போம் என்ற நம்பிக்கை ! கரையில் நிற்கும் மனிதனுக்கோ அது கரையை கடந்து வராது என்ற நம்பிக்கை ! நம்பிக்கை முரண்படலாம்... ஆனால் நம்பிக்கையின்றி வாழ்க்கை சுழற்சியில்லை...

நான் ஒரு கண்ணாடி.. என்னை பார்த்து நீ சிரித்தால், நானும் சிரிப்பேன்.. நீ அழுதால், நானும் அழுவேன்.. ஆனால் நீ அடித்தால், நான் அடிக்க மாட்டேன்.. உடைந்து போவேன்.. அது தான் உண்மையான நட்பு..!!

•••உலகத்தின் கையில் நீ இல்லை••• ••• உலகம் உன் கையில் இருக்கிறது உன் கை ரேகைகளை போன்று••• மதிய வணக்கம்!

விலங்குகள் மனதிற்கு உகந்த நண்பர்கள்; அவைகள் எந்த கேள்வியும் கேட்பதில்லை, எந்தவொரு விமர்சனமும் செய்வதில்லை. - ஜார்ஜ் எலியட்

தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்

பணத்தைத் தவறான வழியில் இழப்பது குற்றம். தவறான வழியில் தேடுவது அதைவிட பெரிய குற்றம். -ஜான் ரஸ்கின்

இழந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாம்... இழந்த காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது..

அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும். - அப்துல்கலாம்

எளிதில் கிடைத்தது உன் நட்பு, அனால்.. எளிதாக இல்லை நீ இல்லாத நாட்கள்.

உற்சாகமற்ற உண்மை ஒரு பரபரப்பான பொய்யினால் மறைக்கப்பட்டு விடலாம். - ஆல்டஸ் ஹக்ஸ்லி

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.

மனைவி : "ஏங்க.. என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடவை கலர் ஞாபகம் இருக்கா??" கணவன் : "இல்லையேமா" மனைவி : "ம் ம்.. தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.." கணவன் : "அது இல்லடா செல்லம்.. தண்டவாளத்துல தலை வைக்க போறவன் வர்ற ரயில் சேரன் எக்ஸ்ப்ரெஸ்சா, நீலகிரி எக்ஸ்ப்ரெஸ்சானா பாத்துட்டு இருப்பான்.."

நாம் பெரிய மனிதர்களாக வேண்டும் என்ற அவசர முயற்சியில் சின்ன மனிதர்களாகிவிடுகிறோம்..!

ஒருவர் பிச்சைகாரரிடம்.. நண்பர்: ஏம்பா, ஐந்நூறு ரூபா நோட்டுக்கு சில்லறை இருக்குமா .. .. ? பிச்சைக்காரன்: நாங்களும் பேப்பர், டி.வி. நியூஸ்யெல்லாம் பார்க்கறவங்கதான் சார் .. இது 2003க்கு முன்னாடி பதிவான நோட்டு.. இது செல்லாது.. ங்கொய்யால!.. யாரு கிட்டே?!..

பதில் இல்லாத ஒரு கேள்விக்கு பதில் தேடுவது தான் "வாழ்க்கை"..!! மதிய வணக்கம்!

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

உன்னை தொட்டுச் சென்ற தென்றல் என் காதில் வந்து சொன்னது.. "இன்னிக்கும் உன் friend குளிக்கல" என்று..

காடுகளை அழித்து வீடு கட்டுவோம்.. யானைகள் ஊருக்குள் புகுந்ததாக சொல்வோம்..! எரி, கம்மாயிகளை ஆக்கிரமித்து வீடுகட்டுவோம்.. தண்ணீர் ஊருக்குள் புகுந்ததாக சொல்வோம்..! விளை நிலங்களை மனைகளாக்கி வீடுகட்டுவோம்.. அரிசி பருப்பு விலை உயர்ந்துவிட்டதாக சொல்வோம்..! லஞ்சம் கொடுத்து காரியத்தை முடிப்போம்.. காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவோம்.. இலவசங்களை வாங்கி பூரிப்பு அடைவோம்.. அரசியல்வாதிகள் நாட்டை கெடுத்துவிட்டதாக வெக்கமே இல்லாமல் சொல்வோம்..!!

அந்த 5 வயது சிறுவன் கரையோரத்தில் நின்றுக் கொண்டிருக்க, கடல் அலைகள் அவன் கால்களை தொட்டு தொட்டு சென்றது.. அந்த சிறுவன் ஒரே வாக்கியத்தை தான் திரும்ப திரும்ப கூறிகொண்டிருந்தான் "ஆயிரம் முறை என் காலில் விழுந்தாலும் உன்னை மன்னிக்க மாடேன்.. என் பெற்றோரை ஏன் கூட்டிச் சென்றாய்??.."

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் இருக்கும் வரையில்.. !!

உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.

கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்..

எப்பொழுது மாறுதலில்லாத நிலையினை கொண்டிருக்கிறீர்களோ, அப்பொழுது நிச்சயமான சில தடைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். - ட்வைட் டி ஐசனோவர்

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

உங்களுக்கு துன்பம் வருகையில், உங்கள் சொந்தங்களும் நண்பர்களும் உங்களுக்கு பின் நிற்பார்கள்.. சந்தேகம் இருந்தால், உங்கள் திருமண ஆல்பத்தை பாருங்கள்..!!

ஒருவர்: சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு? அதிகாரி: டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே

: எல்லோருக்கும் நண்பனாக இருப்பவன், யாருக்கும் நண்பன் இல்லை.

ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்!

முடியும் இந்த இரவு நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்.. மலரும் நாளைய காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்.. ஆனால் உன் நட்போடு வாழ பல ஜென்மம் வேண்டும்..!!

எல்லாவற்றையும் கொடுப்பது, எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது அனைத்தும் அன்பே. - சோரென் கீர்கேகார்ட்

ஒருமுறை இந்த உலகில் பிறந்துவிட்டாலே இறப்பதற்கு போதுமான வயதை அடைந்து விடுகிறோம். - சோரென் கீர்கேகார்ட்

ஒரு சில உறவுகளின் உண்மை சுயரூபம் தெரிய வரும் போது தான் புரிகிறது இவர்களையா உயிருக்கு மேலாக நேசித்தோம் என்று...

மழையில் நான் நனையாமல் இருக்க, குடை விரித்தாய்.. நனையத்தொடங்கியது என் இதயம்..!!

புன்னகையுடன் பூத்துக்குலுங்க புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மழையில் நினைந்த என்னை எல்லோரும் திட்டிய போது தலையை துவட்டி விட்டு மழையை திட்டியவள் என் அம்மா...

பிரிவின் வலியை நீ அறிவாயோ இல்லையோ, உன்னையே நேசித்துக் கொண்டிருக்கும் ஓர் ஜீவன் உணர்ந்து கொண்டிருக்கும் அதன் கொடுமையை...

நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன.. நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

நான் சாகும் வரை என்னை சாகடித்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்...

உண்மையான அன்பை சுமக்கும் இதயம் அடிக்கடி ஏமாறலாம்..! அனால் யாரையும் ஏமாற்றாது..!

பெண்கள் இல்லை என்றால் ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை.. பெண்களே இல்லை என்றால் ஆறுதலே தேவை இல்லை

அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும். - கவிஞர் கண்ணதாசன்

எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அவள் தான் அந்த ஆணின் மொத்த எதிர்காலமுமாக ஆகிறாள்...

கிடைக்கும் போதே பயன்படுத்து.........! இருக்கும் போதே அனுபவி..........! நினைத்தவுடன் செய்து முடி.......! உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு, உன்னை இழந்து விடாதே..... ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒரு முறை...! விடியல் வணக்கம்!

மழலைகளிடம் தோற்றுப்போகும் போது ஏற்படும் சந்தோஷத்தை....எதிரிகளிடம் பெறும் வெற்றி கூட தது விடுவதில்லை...

உங்கள் இதயம் ஒரு எரிமலையென்றால், அதில் பூக்கள் பூக்கும் என்பதை நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? - கலீல் ஜிப்ரான்

சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் சரியாக் கேட்டுவிடுகிறது!!

புலிக்கு முன்னால போன மானும், பொண்ணுங்க பின்னால போன ஆணும் பொலச்சதா சரித்திரிமே இல்ல..!!

பிறக்கும் இனிய புத்தாண்டு, நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!!

இந்த நன்னாளில் உங்கள் இல்லங்களில் உள்ள கவலை என்னும் இருள் மறைந்து மகிழ்ச்சி என்னும் ஒளி பெருக என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!

அவனவனுக்கு உரித்தானதை அவனவனுக்கு வழங்குவதுதான் நீதி.

முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வையுங்கள்.. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை..!

வாழ்க்கையின் எளிதான தத்துவம்: நீங்க தான் எல்லாமே ன்னு நினைச்சுக்காதீங்க... நீங்க எதுவுமே இல்லன்னும் நினைச்சுக்காதீங்க.. நானும் ஏதோ ஒண்ணு.. என்னாலையும் எதுவும் முடியும்..முயற்சி பண்ணினால் ன்னு நினையுங்க.. எதுவும் சாத்தியமாகும். காலை வணக்கம்.

அளவுக்கு அதிகமான அன்பும் எல்லையின்றி கொண்டாடப்படும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒருநாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்துக்கும் இடம் உண்டு.. !!

மற்றவர்களை எடைபோடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போய்விடும்.

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது...

நல்ல நண்பனைத் தேடுவதைவிட நீ நல்ல நண்பனாக இரு.. கட்டாயம் உன்னைத்தேடி நல்ல நட்பு அமையும்..

பையன்: "நான் பாதுகாப்பு உரையை பயன்படுத்தியும் என் Girlfriend கர்பம் ஆயிட்டா டாக்டர்" டாக்டர் : "ஒரு கதை சொல்றன் கேளு... ஒரு வேட்டைக்காரன் ஒரு நாள் gun க்கு பதிலா ஒரு குடைய கொண்டு போனான். திடீரென எங்கயோ இருந்து ஒரு சிங்கம் அவன் முன்னால வந்திச்சு உடன அவன் குடையோட கைப்பிடிய இழுத்து சிங்கத்த நோக்கி சுட்டான். சிங்கம் அந்த இடத்திலயே செத்து போச்சு.." பையன் : "அதுக்கு வாய்ப்பே இல்ல.... வேற யாராச்சும் gun வச்சு shoot பண்ணிருப்பாங்க" டாக்டர் : "அதத்தான் செல்ல வந்தேன்!!"

வளையக் கூடியது தான் இருந்தாலும் வளைந்து கொடுக்காமல் வம்பிழுத்துவிடுகிறது.. நாக்கு..!மாலை வணக்கம்

என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் கட்டமுடியும்,வீட்டிலுள்ள பெண்களுக்கு இருசக்கரவாகனம் வாங்கமுடியும்,செல்போன் வாங்கமுடியும்,வாங்கிய கடனை கட்டமுடியும். ஆனால், தரமான சாலைகள் போடுவது, தட்டுபாடற்ற குடிநீர் வழங்குவது, பாலங்கள் கட்டுவது, ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது, தரமான பேரூந்துகள் பராமரிப்பது, தடையில்லா மின்தருவது உற்பத்தி செய்து தருவது, அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது, சிறந்த கல்வி இலவசமாக தருவது, சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது, ஆறுகளை இணைப்பது, ஏரி,குளங்களை தூர்வாருவது, அணைகள் கட்டுவது, காவல்துறையை நவீனப்படுத்துவது, தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது, தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது. தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல். மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது.. இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய வேலைகள் ஆயிரம் இருக்கிறது. இதையல்லாம் நாம செய்யமுடியுமா? இதையெல்லாம் செய்வதற்கு நிதியை பயன்படுத்தாமல் இலவசமா கொடுக்கறாங்களாமா... என் வேலையை அரசாங்கம் செய்தால், அரசாங்க வேலையை யார் செய்வது? என் வீட்டுச்செலவுகளை அரசாங்கம் செய்தால், அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடன் வாங்குவார்களா? இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா?

இன்று உங்களால் பெற முடிந்த மகிழ்ச்சியை நாளை வரை தள்ளிப் போடாதீர்கள். - ஆல்டஸ் ஹக்ஸ்லி

24 மணி நேரத்தில், 5 நிமிடமாவது முழுமையான சந்தோஷத்தோடு இருக்க முயற்சிப்போம்... இனிய மாலை வணக்கம் !

தோழி..! நீ எழுதிய காதல் கடிதங்களாக உன் காலடித் தடங்கள் என் நினைவுகளில் நிறைகின்றன...

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்.. கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டும் அல்ல.. என்னோடு இருக்கும் கவலைகளும் மறந்து விடும்..!!

கணவன்: அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க. மனைவி: சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும். கணவன்: ஓகே!!.. அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுடுறேன்..

சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல விவசாய விஞ்ஞானிகள்.... ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்.. விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்... சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்..இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும். தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது. ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் . அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்... அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி. ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன். கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் நம் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விஷயங்களை...!!!

எங்கே பிறந்தாலும், எப்படியோ இருந்தாலும், உணர்வை உணர்வுக்கு ஒன்று சேர தருவது தான் உயிர் நட்பு..!

ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.. நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை..!

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

வருடத்தின் ஒரு நாள், வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்.. தீபங்களின் ஒளிவெள்ளத்தில் அன்பானவர்களின் அருகில் முத்தோரின் வழியில் ஆண்டு ஆண்டுகாலமாய்.. நன்மைகள் நிறைய புதிய வழி பறக்க புதுமண தம்பதிகள் இன்புற்று எல்லாவளமும் பெற இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!!!

கவணன் : ஒரு கப் காபி.. 1970 மனைவிமார் : இதோ கொண்டாறேன் மச்சான்.. கவணன் : ஒரு கப் காபி.. 1980 மனைவிமார் : இதோ தரேன் மாமா.. கவணன் : ஒரு கப் காபி.. 1990 மனைவிமார் : தரேங்க... கவணன் : ஒரு கப் காபி.. 2000 மனைவிமார் : போட்டுக் குடி... கவணன் : ஒரு கப் காபி.. 2015 மனைவிமார் : என்னடா கேட்டே???.. கணவன் : தரட்டுமான்னு கேட்டேன் மேடம்...!!

உங்கள் கண்களை நட்சத்திரங்களின் மீதும், உங்கள் பாதங்களை தரையின் மீதும் வைத்திருங்கள். - தியோடோர் ரூஸ்வெல்ட்

பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! இரவு தூக்கம் வரலைனா, மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும் - மனதை வருடிய வரிகள்

உன் நண்பனை, அளவோடு நேசி.. ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம். உன் எதிரியை அளவோடு வெறு.. ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம். இனிய காலை வணக்கம்.

நண்பர்களே நாளை ஒருநாள் மட்டும் எந்த பிரச்சினையும் செய்யாதீர்கள் ஏனெனில் என்னுடைய ஆயுதங்கள் பூஜையில் இருக்கும் என்னால் உங்களை காப்பாற்ற முடியாது மன்னிக்கவும். இனிய ஆயுத புஐை நல்வாழ்த்துகள்!!!

எதிரியை அழிக்க ஒரு சிறந்த வழி.. அவனை நண்பனாக்கி கொள். - ஆபிரகாம் லின்கன்

இதயம் ஒன்று சொல்லுகிறது, மூளை ஒன்று சொல்லுகிறது என்று ஒரே குழப்பமா? தயக்கம் வேண்டாம். இதயம் சொல்வதை கேளுங்கள்.. மூளையால் உணர முடியாததை இதயத்தால் உணர முடியும்..!

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நண்பன் இருந்தால் வாழ்வில் துன்பம் தெரியாது... நண்பன் பிரிந்தால் வாழ்வில் இன்பம் தெரியாது.. நண்பனை மறக்காதே..!

அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான் உண்மையான அன்பு..

உன்னோடு மட்டும் பொருந்திப் போகிறது என் கவிதைகள்...

அழகு மற்றும் அப்பாவித்தனம் ஆகியவற்றுக்கு எதிரிகள் கிடையாது. - வில்லியம் பட்லர் ஈட்ஸ்

மனைவி – "ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?" கணவன் – "அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி." மனைவி – "எங்கப்பா அப்படியா காத்திருந்தார்??"

நல்லவனாய் இரு தவறில்லை... ஆனால் அதை நிபிருபிக்க முயற்சி செய்யாதே. அதை விட முட்டாள்தனமான விஷயம் ஏதும் இல்லை... மதிய வணக்கம்!!!

எந்த சிறந்ததை நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்ததோ அதையே கற்றுக் கொடுங்கள். - ரிச்சர்ட் பாக்

என் முயற்சிகள் என்னைப் பல முறை கைவிட்டதுண்டு.! ஆனால் நான் ஒரு முறைகூட என் முயற்ச்சியை கை விட்டதில்லை.!

அனல் காற்று அகலட்டும்.. இதமான காற்று பரவட்டும்.. உள்ளத்தை அமைதி தழுவட்டும்.. இனிய இரவு வணக்கம் !!

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

முறைப்பொண்ணு மேல மஞ்சத்தண்ணி ஊத்தி விளையாண்ட மாரியம்மன் கோவில் விழா தான் உலகின் முதல் ஹோலிப்பண்டிகை..!!

உங்கள் ரகசியங்களை காப்பது என்பது ஞானமாக இருக்கலாம் ஆனாலும், மற்றவர்களுக்கு அது மடத்தனமானது என்பதையும் எதிர்பார்த்தே இருக்கவேண்டும். - சாமுவேல் ஜான்சன்

இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்.."

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

நீ நினைத்தால் விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை! - மனதை வருடிய வரிகள்

விளக்கின் அடியில் படர்ந்து கிடக்கும் இருட்டு யாருக்கும் தெரிவதில்லை.. அதுபோல் சிரிப்பின் பின்னே சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை...

நீ அழகா இருக்கேன்னு நெனக்கல.. நீ ருசியா இருப்பேனும் நெனக்கல.. உன்னை இன்னும் ஒரு மாசத்துக்கு நெனச்சுக்கூட பாக்க மாட்டேன்.. ஆனா இதெல்லாம் நடந்துருமொனு பயமா இருக்கு!! -புரட்டாசி பீலிங்க்ஸ்

பிரச்சனைகள் எல்லாம் நிலவு போல... ஓரு நாள் குறையும் ...ஒரு நாள் கூடும் ...ஓருநாள் காணாமலே போய்விடும் ...அதனால கவலைகளை விட்டுட்டு சந்தோசமா தூங்குங்க.. குட் நைட்!!

நாம் நம் வாழ்வில் தகர்க்க வேண்டியது... நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை மட்டுமே.. இனிய நாளின் உதய வணக்கங்கள்!

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

வாழ்க்கையில் நம்மை நாமே ஏமாற்றி கொள்கிற முதல் விஷயம், நாம் பாசம் வைத்து இருக்கிற அனைவரும் நம் மீது பாசம் வைத்து இருப்பாங்கனு கற்பனை பண்ணுவது...

உண்மையான அன்புக்கு பிரிவு என்பது ஒரு தொடக்கம் தான்..!!

நம்முடைய முக்கியக் குறைபாடு என்னவென்றால், நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக அவற்றைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதுதான்!

நண்பன் எதிரியானால் நிம்மதி இருக்காது.. எதிரி நண்பனானால் நம்பிக்கை இருக்காது..

இதயத்தை தொடுகிறது ... மற்றுமொரு காலை அது. நான் மீண்டும் அலுவலகம் போக வேண்டும் தான். ஐயோ செய்தித்தாளில் என் படம் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அது இரங்கல் குறிப்பை பத்தியில் என்ன செய்யும் ?? விநோதம். ஒரு நிமிடம்... நான் யோசிக்கிறேன் நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் மார்பு கடுமையான வலி இருந்தது , ஆனால் அதன் பிறகு நான் எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். காலை இப்போது, என் காபி எங்கே? ஏற்கனவே 10:00 மணி ஆகிவிட்டது ? எனக்கு அலுவலகத்திற்கு தாமதமாகிறது என் முதலாளி என் மேல் எரிச்சலில் இருக்க ஒரு வாய்ப்பு இது . எங்கே எல்லோரும். ??? நான் கதறினேன். "நான் பார்த்தேன் என் அறைக்கு வெளியே ஒரு கூட்டம்!! " பல மக்கள், ஆனால் ஏன் அழுகின்றனர்? என்ன நடக்கிறது ??? நான் தரையில் கிடக்கின்றேன் . "நான் இங்கே இருக்கிறேன்". நான் கத்தினேன் !!! "நான் இறக்கவில்லை" இதோ பார். நான் மீண்டும் கத்தினேன் !!! அவர்கள் அனைவரும் படுக்கையில் என்னை பார்க்கின்றனர். நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன் . "நான் இறந்துவிட்டேனா ??" நான் என்னையே கேட்டேன். எங்கே என் மனைவி, என் குழந்தைகள், என் நண்பர்கள், என் அம்மா, அப்பா? அடுத்த அறையில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருதனர் . என் மனைவி அழுது கொண்டிருந்தாள், உண்மையில் அவள் சோகமாக. என் சிறிய குழந்தை என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அவர் அவரது அம்மா வருத்தமாக இருந்ததால் அவனும் அழுதான். நான் அவனை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று என் குழந்தையிடம் சொல்லாமல் எப்படி போவது..??? இந்த உலகத்தில் உண்மையில் மிகவும் அழகான மற்றும் மிகவும் பாசமான மனைவி நீதான் என்று என் மனைவி சொல்லாமல் எப்டி போக முடியும் .. ?? நான் எப்படி என் பெற்றோர்களிடம் உங்களால் தான் நான் என்று சொல்லாமலேயேசெல்வது ?? எப்படி என் நண்பர்களிடம் ஒருவேளை நீங்கள் என் வாழ்க்கையில் இல்லாமல் போனால் நான் தவறான விஷயங்களை செய்திருப்பேன் என்று சொல்லாமல் செல்வது...??? நான் தேவைப்படும் போது எப்போதும் அங்கு இருந்ததற்கு நன்றி. ஒரு நபர் மூலையில் நின்று கொண்டு இருக்கிறார் , தனது கண்ணீர் மறைக்க முயற்சிக்கிறார். அவர் என் சிறந்த நண்பர், ஆனால் ஒருமுறை ஒரு சிறிய தவறான புரிதல் எங்களை பிரித்து விட்டது , நம்மை துண்டிக்க நாம் இருவரும் வைத்திருந்த வலுவான ஈகோ வே காரணம். நான்... அங்கு சென்று, அவரிடம் என் கை நீட்டி அன்பான நண்பா, நாம் இன்னும் சிறந்த நண்பர்கள் , என்னை மன்னியுங்கள், நடந்த எல்லாவற்றிற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றேன்.... அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவர் இன்னும் ஈகோ வில் உள்ளார். நான் மன்னிப்பு கேட்ட பின்பு கூட ஒரு பதிலும் இல்லை. ஒரு நிமிடம்.. அவரால் என்னை பார்க்க முடியவில்லை என்று தெரிகிறது !!!! அவரால் என் நீட்டிக்கப்பட்ட கையை பார்க்க முடியவில்லை. நான் உண்மையில் இறந்து விட்டேனா ??? நான், என் அருகில் உட்கார்ந்து அழுவது போல உணர்கிறேன். "ஓ கடவுளே !!!! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள் ." நான் என் மனைவி, என் பெற்றோர்கள்என் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்..!! என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் " என்று நான் கத்தினேன். அவளால் என் வார்த்தைகளை கேட்க முடியவில்லை. உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு அவளிடம் சொல்லவே இல்லை. . "கடவுளே !!!!" நான் கதறினேன். இன்னும் கொஞ்சம்நேரம் plzzzzzzzzzzzzzz .. நான் அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு... என் குழந்தையை இறுக கட்டி அணைக்க.... என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க...., என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க... என் நண்பர்களிடம் மனதார மன்னிப்பு கேட்க.... இப்பொழுது நான் அழுதேன் !!!! நான் கத்தினேன் ...!!! "கடவுளே தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள் !!!! இப்போது மெதுவாக விழித்தேன், என் மனைவி என் அருகாமையில் வந்து "நீங்கள் உங்கள் தூக்கத்தில் சத்தம் போட்டீர்கள் ," என என் மனைவி கூறினார். "நீங்கள் ஏதும் கனவு கண்டீர்களா ?" என்றாள்..!!! நான் கண்டது வெறும் கனவு தான் .. .. என் மனைவியால் தற்போது நான் கூறுவதை கேட்க முடிகிறது , இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரமாகும். நான் அவளை கட்டி அணைத்து " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, நான் உண்மையில் உன்னை நேசிக்கிறேன் கண்ணே" என்றேன். அவளின் கண்களில் இருந்து வரும் கண்ணீரையும் அவளது புன்னகையின் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது .. "இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி." நண்பர்களே இன்னும் நமக்கு நேரம் இருக்கிறது.... நமது ஈகோவை புறம் தள்ளி விட்டு நமது பாசத்தையும் நேசத்தையும் நமக்கு நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள். ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது. பின் கிடைக்காமல் போனால் வருத்தபடுவீர்கள்.... பணத்திற்கும், பதவிக்கும் பின்னால் ஓட வேண்டாம் .... மனித வாழ்க்கை ஒரே ஒருமுறை தான், அதுவும் அந்த வாழ்க்கை மிகமிக குறுகியது, இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்யுவோம், சந்தோஷமாய் இருப்போம்....!!! (படித்ததில் பாதித்தது.....!!!)